காட்பாடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்!
வேலூர், மார்ச் 2-
காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
காட்பாடி தாலுகா அலுவலகத்தில் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை பொதுத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், தனித்துணை ஆட்சியருமான (ச.பா.தி). ஜி..புண்ணியகோட்டி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.பாலமுருகன், பி.செந்தில், தேர்தல் துணை வட்டாசியர் டி.முரளிதரன் மற்றும் காவல் துறையினரும், வருவாய் அலுவலர்களும், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை உடனுக்குடன் விரைந்து சென்று நிவர்த்தி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.அடிப்படை தேவைகள் இருக்கிறதா என்று மேற்பார்வையிட வேண்டும். எந்த கட்சியாக இருந்தாலும் தயவு தாட்சண்யம் காண்பிக்காமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் இந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் செய்திருந்தார்.

No comments
Thank you for your comments