Breaking News

முக்கிய கட்சியுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா

சென்னை, மார்ச் 2-

முக்கிய கட்சியுடன் கூட்டணி அமைக்கிறார் சசிகலா. இதற்காக நடந்த பேச்சுவார்த்தையால் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். 



அதன் பிறகு கடந்த பிப்ரவரி 8ம் தேதி தமிழகம் திரும்பினார். இதனைத்தொடர்ந்து, சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனிடையே, ஜெயலலிதா பிறந்தநாள் அன்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தனது மனைவியுடன் சென்று சசிகலாவை சந்தித்து பேசினார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சரத்குமார் அதிமுக கூட்டணியில்இருந்து வெளியேறி, ஐஜேகே ரவி பச்சமுத்து இணைந்து புதிய கூட்டணி அமைத்தார். இதனைத்தொடர்ந்து, நடிகர் சரத்குமார் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நிதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு கமலஹாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். மூன்றாவது அணியில் இணையுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுவதாக கூறினார். அப்போது, முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத்குமார், தேர்தல் வெற்றிக்குப் பிறகுதான் முதலமைச்சரை தேர்வு செய்ய உள்ளதாக கூறினார். சரத்குமார் சென்றபிறகு கமலஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் முதலமைச்சர் வேட்பாளர் தான் என்பதில் மாற்றமில்லை என தெரிவித்தார். அமமுகவுடன் கூட்டணியா.? என்கின்ற கேள்விக்கு, எந்த கட்சியுடன் இணைந்து செயல்பட தங்களுக்கு தயக்கமில்லை என கூறினார். சரத்குமார் நேரடியாக வந்து கமல்ஹாசனை சந்தித்து, சசிகலா கூறி தான் என தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவை பொறுத்தவரையில் இந்த தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து. அதிமுகவிற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவில் உள்ளார். அதிமுக தோல்வி அடைந்தால்தான் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை மறுபடியும் கைப்பற்ற முடியும் என சசிகலா கணக்கு போடுகிறார். இதனால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதுபோன்ற கூட்டணியை கண்டு அதிமுக கலக்கமடைந்து காணப்படுகிறது.

No comments

Thank you for your comments