Breaking News

தேர்தல் பணியில் சிறப்பு காவலராக முன்னாள் படைவீரர்கள் பணியாற்ற அழைப்பு

ஈரோடு, மார்ச் 23-

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, வாக்கு பதிவு நடைபெறும் போது தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலராக முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பணியில் பங்கேற் விருப்பமுள்ளவர்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் - ஏப்ரல்  2021-இன் வாக்கு பதிவு நடைபெறும் போது தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலராக முன்னாள் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே, 65 வயதிற்குட்பட்ட திடகாத்திரமாக மற்றும் ஆரோக்கியமாக உள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் தவறாமல் தங்களது விருப்பத்தினை கீழ்காணும் அசல் ஆவணங்களுடன் ஈரோடு, 106/3, காந்திஜி ரோட்டிலுள்ள ஜவான்ஸ்பவன் மூன்றாம் தளத்தில் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல  துணை இயக்குநர் அலுவலகத்தில் வாரத்தின் ஏழுநாட்களிலும்; நேரில் ஆஜராகி தங்களது பெயரினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளுமாறும் அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் தங்களது விருப்ப விண்ணப்பத்தினை தந்து பதிவு செய்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், https://bit.ly/Details_of_Retired_Personnel_reportedfor_TNAE_2021, என்ற இணையதளத்திலும் தங்களது விருப்ப விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம்.

அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்களது பெயரினை பதிவு செய்து கொண்ட முன்னாள் படைவீரர்கள் தாங்கள் பதிவு செய்த விவரத்தினை முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண்: 0424-2263227-யை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திடுமாறும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  சி.கதிரவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 ஆவணங்கள் விபரம்:

1.  அசல் படைவிலகல் சான்று;

 2.  அசல் முன்னாள் படைவீரர் அடையாள அட்டை; 

3.  அசல் ஆதார் அட்டை; 

4.  அசல் வாக்காளர் அடையாள அட்டை.


No comments

Thank you for your comments