திமுக வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்
வேலூர், மார்ச் 18-
வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதி ப.கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.பி. நந்தகுமார் அவர்களை ஆதாரத்து திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் நின்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், வேலூர்மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதி ப.கார்த்திகேயண், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.பி. நந்தகுமார் அவர்களை ஆதாரத்து திமுக இளைஞரணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஊழலில் கொழிக்கவேண்டும் என்பதற்காகவே நம் உரிமைகளை அடகுவைத்து அவற்றை விட்டுக்கொடுத்த அடிமைகளை விரட்ட அண்ணன் ஏ.பி. நந்தகுமார் அவர்களுக்கு உதயசூரியனில் வாக்களித்து வெற்றிபெற செய்து சட்டமன்றம் அனுப்புங்கள் என பேசி ஒடுகத்தூர் மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.24 ஆயிரம் உதவிதொகை, குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைதொகை வழங்க உறுதியளித்துள்ள தலைவர் அவர்களின் ஆட்சியை அமைக்க அண்ணன் அவர்களை சட்டமன்ற உறுப்பினராக்குங்கள் என்று பேசி அணைக்கட்டு மக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். வேலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான அண்ணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக்கோரி ஊசூர் பகுதியில் பெரும் உற்சாகத்துடன் கூடியிருந்த மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.
இதேபோன்று, வேலூர் வேட்பாளர் அண்ணன் ப.கார்த்தியேகன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மண்டி தெருவில் உரையாற்றினார். அவரை பெருவாரியான வாக்குகளில் வெற்றிபெறச் செய்து மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று திரண்டிருந்த மக்களிடை எழுச்சி உரையாற்றினார்.
அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளர் நந்தகுமாரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உதய நிதி மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். புதிய கல்வி கொள்கையால் 3 ஆம் வகுப்புக்கும், 5 ஆம் வகுப்புக்கும் பொது தேர்வு கொண்டு வந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்
அணைக்கட்டு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, கூட்டத்தினரை நோக்கி ஜெயலலிதா எப்படி இறந்தார் தெரியுமா? என்று கேள்வி எழுப்பினார். கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் புட் பாய்சன் என்று பதில் அளிக்க, உதயநிதி ஸ்டாலின் வேடிக்கையாகவும், சாமார்த்தியமாகவும் உனக்கென்னப்பா நீ சொல்லிட்டு போயிருவே, என் மேல தான் வழக்கு போடுவானுங்க என்றும் இதுவரை தன் மீது 22 கேஸ் போட்டிருப்பதாக வேடிக்கையாக தெரிவித்தார்.
பிரசாரத்தின் போது உதயநிதியிடம் பெண் குழந்தை ஒன்று கொடுக்கப்பட்டது. அவருடன் இருந்த வேட்பாளர் நந்தகுமார் அந்த குழந்தையை தூக்க முயன்ற போது, செல்ல மறுத்து உதயநிதி கரங்களில் ஒய்யாரமாக் அமர்ந்து கொண்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து கூட்டத்தில் இருந்த தனது தாயை பார்த்ததும் அவரிடம் சென்றது.
No comments
Thank you for your comments