ம.நீ.ம., தி.மு.க., ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
திருப்பூர், மார்ச் 18-
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக, மதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தாராபுரம் மதிமுக மாவட்ட துணைச் செயலாளரும் தொழிலதிபருமான கவின் நாகராஜ் மற்றும் திமுக நகர செயலாளர் கே.எஸ். தனசேகர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதேபோல் திருப்பூர் லட்சுமி நகரிலுள்ள கவின் நாகராஜின் சகோதரரும், மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளருமான அனிதா சேகரின் பனியன் நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நீடித்த நிலையில், அரசியல் பிரமுகர்களின் உறவினர்கள் மற்றும் ஊழியர்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
No comments
Thank you for your comments