வேலூர் ரோட்டரி சங்க திருவிழாவுக்கு மாவட்ட ஆளுநர் பாண்டியன் வருகை
வேலூர், மார்ச் 25-
வேலூர் ரோட்டரி சங்கத்தில் நடந்த திருவிழாவுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாண்டியன் வருகை தந்து சிறப்பித்தார்.
வேலூர் ரோட்டரி சங்கத்தின் 73 ஆண்டுக்கான, ரோட்டரி மாவட்ட ஆளுநர் கே.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்தார். அவருடன் மாவட்ட செயலர் தினேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார், துணை ஆளுநர் கணேஷ் , ஜிஜிஆர்.ஆதவன் பிரகாஷ் பங்கேற்றனர். இவ்வருகையில் இந்த ஆண்டுக்கான ரோட்டரியின் மாதாந்திர தலைப்பிற்கான செயல் திட்டங்களை பார்வையிடவும், நிதிநிலை சார்ந்த வரவு செலவுகளை சரிபார்க்கவும், தேவையான வழிகாட்டுதல்களை வழங்கிடவும் , பன்னாட்டு ரோட்டரி சங்கத்திடமிருந்து நலத்திட்டத்திற்கு தேவையான நிதி ஆதாரத்தை பெற்றுத்தர பரிந்துரைக்கவும், வருகை புரிந்தார். இவ்வாறு ஒவ்வொரு ரோட்டரி சங்கத்திற்கும் ஆளுநரின் வருகை என்பது அவ்வாண்டில் நடைபெறும். அதேநேரத்தில் அணைக்கட்டு நாராயணபுரத்தை சார்ந்த பரிமளா, விருபாட்சிபுரம் ஜின்னு முதலியார் தெருவை சார்ந்த தமிழ்பிரியா ஆகியோரின் குடும்ப வாழ்வாதாரத்திற்கான தையல் இயந்திரங்களும், மேட்டு இடையன்பட்டி கோயில் திருவிழாவிற்கான மக்களின் கொரோனா பாதுகாப்புக்காக 1000 முக்க்கவசங்களும் இலவசமாக வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு தலைவர் ஜோசப் அன்னையா தலைமை வகித்தார்.
பல்வேறு ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்து பங்கேற்றனர். அச்சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், ஆட்சிமன்ற உறுப்பினர்கள், உறுப்பினர்கள், மற்ற சங்க உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர். கார்த்திக், காட்பாடி பிசிகே நகர் தொழிலதிபர் பரத் ஆகிய புதிய உறுப்பினர்கள் ரோட்டரி சங்கத்தில் சேர்க்கப்பட்டனர். செயலர் சந்துரு அறிக்கையை சமர்ப்பித்ததோடு, பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். சிற்றுண்டி உபசரிப்புடன் விழா நிறைவு பெற்றது.
No comments
Thank you for your comments