Breaking News

குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பரிதா பிரசாரம்!

வேலூர், மார்ச் 25- 

குடியாத்தம் தனி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.பரிதா பேரணாம்பட்டு, குடியாத்தம் பகுதிகளில் அதிரடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குடியாத்தம் (தனி) தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜி.பரிதா பேரணாம்பட்டு புதிய லைன், எம்ஜிஆர் நகர், கேகே நகர், ஜே ஜே நகர், பாத்திமா நகர், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், காங்கிரஸ்  ஹவுஸ் ரோடு, உழவர் சந்தை போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அவருடன் நகர செயலாளர்கள் ஜே.கே.என். பழனி, எல்.சீனிவாசன், ஒன்றிய செயலாளர் பொகலூர் டி.பிரபாகரன், சுரேஷ்பாபு, டி.சிவா, கஸ்பா ஆர்.மூர்த்தி, சிவாஜி, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் துரை, திருமால், கே.ஜெகதீசன், ஆர்.கோபி, 1வது வார்டு செயலாளர் பி.ஜி.ஆர்.பழனி, ராமு, ராஜாமணி, ஆர்.சரவணன், சூளை எம்.பாபு, ஜே.ஜே.நகர் பிரேமா, கலா (எ) கலைச்செல்வி, கண்ணகி, ஜீவா, எம்.சூரியன், தேமுதிக நிர்வாகிகள் சி.நாகப்பன், புதிய லைன் ஜி.வெங்கடேசன், த.மா.கா.,  நகர தலைவர் வழக்குரைஞர் துரை, சதீஷ், பாபு ,புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் டில்லிபாபு, முரளி, பாமக  நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments