Breaking News

தேர்தல் செலவினங்கள் ஒத்திசைவு அறிவிப்பு

 திருவள்ளூர், மார்ச் 25-

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களோ (அ) அவரின் செலவின முகவர்களோ, அட்டவனையில் குறிப்பிட்டுள்ள நாட்களில் தேர்தல் செலவினங்களை ஒத்திசைவு செய்ய தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது - மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021, திருவள்ளுர் மாவட்டதிற்கு உட்பட்ட எண் 002. பொன்னேரி (தனி) சட்டமன்றத் தொகுதி மற்றும் எண் 001. கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர்களின் கவனத்திற்கு, தேர்தல் செலவின பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் செலவினங்களை ஒத்திசைவு செய்ய, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களோ (அ) அவரின் செலவின முகவர்களோ, கீழே உள்ள அட்டவனையில் குறிப்பிட்டுள்ள நாட்களில் தேர்தல் செலவினங்களை ஒத்திசைவு செய்ய தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எண் 002. போன்னேரி (தனி) சட்டமன்றத் தொகுதியில் 25.03.2021, 29.03.2021, 03.04.2021 ஆகிய தேதிகளிலும், 

எண்.001. கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதியில் 26.03.2021,30.03.2021, 04.04.2021 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

இந்த ஒத்திசைவு திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments