Breaking News

ஏப்ரல் 18ம் தேதி முதல் சென்னை-மதுரை இடையே அதிவேக சிறப்பு ரயில்

 சென்னை, மார்ச் 25-  

தற்போது தேர்தல் நடைமுறையோடு, கோடை காலமும் தொடங்கி விட்டதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.


ரயில் போக்குவரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் முன்பதிவு அல்லாத டிக்கெட் பயணத்திற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே இதுவரையில் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

தற்போது தேர்தல் நடைமுறையோடு, கோடை காலமும் தொடங்கி விட்டதால் தென் மாவட்டத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்தநிலையில் வாரம் இருமுறை இயங்கும் அதிவேக சிறப்பு ரயில் மதுரை- சென்னை எழும்பூர் இடையே அடுத்த மாதம் 17ம் தேதி முதல் இயக்கப்படுகிறது. 18ம் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது. மதுரையில் இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும், எழும்பூரில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து இரவு 10.05 மணிக்கு சூப்பர் பாஸ்ட் ரயில் புறப்பட்டு காலை 8.10 மணிக்கு மதுரை சென்றடைகிறது. மதுரையில் இருந்து இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 6.55 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை செல்கிறது.

No comments

Thank you for your comments