Breaking News

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கும் பணி தொடக்கம்

 கடலூர், மார்ச் 25-

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணிணி மூலம் பிரிக்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி அவர்கள் தொடங்கிவைத்து பார்வையிட்டார்.


கடலூர் மாவட்டம் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நாள் 06.04.2021 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 

திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்களும்,

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 29 வேட்பாளர்களும், 

நெய்வேலி சட்டமன்ற தொகுயில் 12 வேட்பாளர்களும், 

பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்களும், 

கடலூர் சட்டமன்ற தொகுதயில் 15 வேட்பாளர்களும், 

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் 12 வேட்பாளர்களும், 

புவனகிரி சட்டமன்ற தொகுதியில் 14 வேட்பாளர்களும், 

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 11 வேட்பாளர்களும், 

காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற தொகுதியில் 13 வேட்பாளர்களும் 

ஆகமொத்தம் 136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

விருத்தாசலம் தொகுதிக்கு 426 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 426 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 458 வி.வி.பேட் இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது, தற்போது விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் கூடுதலாக 426 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கணிணி மூலம் பிரிக்கும் பணி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, தகவல் தொடர்பு அலுவலர் அருள்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஏகாம்பரம், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன், உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 


No comments

Thank you for your comments