குமரி மாவட்டத்தையே வளைத்துப் போட்ட பாஜக!
சென்னை, மார்ச் 10-
20 தொகுதிகளில் தென் மாவட்டங்களில் மட்டும் 6 தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது பாஜக. அதாவது மதுரை வடக்கு, விருதுநகர், நகார்கோவில், குளச்சல், விளவன்கோடு, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் களம் இறங்கி உள்ளது பாஜக. அதிலும் குமரி மாவட்டத்தில் எப்போதும் செல்வாக்கு மிகுந்த பாஜக அங்கு மட்டும் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்து அடுத்தகட்ட நகர்வை நோக்கி பாஜக சென்று கொண்டிருக்கிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருந்தன. பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. இதனால் தொகுதி பங்கீடு விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது. இதேபோல் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள் பட்டியலையும், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளின் பட்டியலையும் அதிமுக வெளியிட்டது.
இதில் பாஜக திருவண்ணாமலை(63), நாகர்கோவில்(230), குளச்சல்(231), விளவன்கோடு(233), ராமநாதபுரம்(211), மொடக்குறிச்சி(100), துறைமுகம்(18), ஆயிரம்விளக்கு(20), திருக்கோயிலூர்(76), திட்டக்குடி(தனி)(151), கோயம்புத்தூர் தெற்கு(120), விருதுநகர்(206), அரவக்குறிச்சி(134), திருவையாறு(173), உதகை(108), திருநெல்வேலி(224), தளி(56), காரைக்குடி(184), தாராபுரம்(தனி)(101), மதுரை வடக்கு(191) ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இந்த 20 தொகுதிகளில் தென் மாவட்டங்களில் மட்டும் 6 தொகுதிகளை கேட்டு வாங்கியுள்ளது பாஜக. அதாவது மதுரை வடக்கு, விருதுநகர், நகார்கோவில், குளச்சல், விளவன்கோடு, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் களம் இறங்கி உள்ளது பாஜக. அதிலும் குமரி மாவட்டத்தில் எப்போதும் செல்வாக்கு மிகுந்த பாஜக அங்கு மட்டும் 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

No comments
Thank you for your comments