Breaking News

சிட்டிங் எம்எல்ஏக்களை ஓரங்கட்டி-மாஜிகளுக்கு வாய்ப்பு வழங்கிய அதிமுக...

 சென்னை, மார்ச் 10-

வரும் சட்டசபை தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுகங்களை ஓரங்கட்டப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன் கரணமாக அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்கல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.  பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக இந்த முறை தேர்தலைச் சந்திக்கிறது.

ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆறு பேரை கொண்ட கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது மீதமுள்ள 171 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

திமுக பல்வேறு கட்சிகளைக் கொண்ட வலுவான ஒரு அணியைக் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுகவும் மிகவும் வலுவான, மக்கள் மத்தியிலும் கட்சியிலும் அதிக செல்வாக்கு உடையவர்களையே வேட்பாளர்களாகத் தேர்வு செய்துள்ளது.

அதிமுக வேட்பாளர் பட்டியலில் எம்பிக்கள் 2 பேர் இடம்பெற்றுள்ள நிலையில், தற்போதைய எம்எல்ஏக்கள் பலருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வேட்பாளர்களாக மகளிர் 15 பேர் அதிமுக சார்பில் களம் காண்கிறார்கள். 

42 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு

வாய்ப்பு மறுக்கப்பட்ட 42 சிட்டிங் எம்எல்ஏக்கள் யார் யார்? 

  1. திருத்தணி - நரசிம்மன், 
  2. கே.வி.குப்பம் - லோகநாதன், 
  3. வாணியம்பாடி - நிலோபர் கபில் (அமைச்சர்)
  4. ஊத்தங்கரை - மனோரஞ்சிதம், 
  5. பர்கூர் - வீ.ராஜேந்திரன், 
  6. கள்ளகுறிச்சி - பிரபு
  7. கங்கவள்ளி - மருதமுத்து, 
  8. ஆத்தூர் - சின்னதம்பி, 
  9. ஓமலூர் - வெற்றிவேல்
  10. மேட்டூர் - செம்மலை, 
  11. சங்ககிரி - எஸ்.ராஜா, 
  12. சேலம் (தெற்கு)- சக்திவேல்
  13. வீரபாண்டி - மனோன்மணி, 
  14. சேந்தமங்களம் -சந்திரசேகர், 
  15. பெருந்துறை -தோப்பு வெங்கடாசலம்
  16. அந்தியூர் - ராஜா கிருஷ்ணன், 
  17. பவானி சாகர் - ஈஸ்வரன், 
  18. குன்னூர் - ராமு
  19. மேட்டுபாளையம் - ஓ.கே. சின்னராசு, 
  20. பல்லடம் - நடராஜன், 
  21. கவுண்டபாளையம் - ஆறுகுட்டி
  22. கிணத்துகடவு -சண்முகம், 
  23. வால்பாறை - கஸ்தூரி வாசு, 
  24. கிருஷ்ணராயபுரம் - கீதா
  25. ஸ்ரீரங்கம் - எஸ். வளர்மதி, (அமைச்சர்)
  26. மணச்சநல்லூர் - பரமேஸ்வரி, 
  27. பெரம்பலூர் - தமிழ்ச்செல்வன்
  28. பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம், 
  29. விருத்தாசலம் - கலைச்செல்வன்,
  30.  மயிலாடுதுறை - ராதாகிருஷ்ணன்
  31. பட்டுக்கோட்டை - வி.சேகர், 
  32. பேராவூரணி - கோவிந்தராஜூ, 
  33. கந்தர்வகோட்டை - ஆறுமுகம்
  34. அறந்தாங்கி - ரத்தினசபாபதி, 
  35. சிவகங்கை -ஜி. பாஸ்கரன், (அமைச்சர்)
  36. கம்பம் -ஜக்கையன்
  37. ஸ்ரீவில்லிபுத்தூர் - சந்திரபிரபா, 
  38. இராமநாதபும் - மணிகண்டன், 
  39. அம்பாசமுத்திரம் - முருகையா பாண்டியன்
  40. நாங்குநேரி - ரெட்டியார் நாராயணன்,
  41.  சோளிங்கர் - சம்பத், 
  42. சாத்தூர் -ராஜவர்மன்

 ஆக மொத்தம் 42 பேருக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. 
இதில், தற்போது அமைச்சர்களாக உள்ள மூன்று பேருக்கு இம்முறை மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, 

கதர் காதி கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், 

தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் 

ஆகிய மூவருக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அதேநேரம் பல முன்னால் அமைச்சர்களுக்கும் இந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி முன்னாள் அமைச்சர்கள் பிவி ரமணா, கோகுல இந்திரா, சி. வளர்மதி, மாதவரம் மூர்த்தி, சின்னய்யா, வி. சோமசுந்தரம். கே. பி. முனுசாமி ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே ராமலிங்கம், ஏ.கே. செல்வராஜ், எம்.எஸ்.எம் ஆனந்தன், செ தாமோதரன், நத்தம் விஸ்வநாதன், கு.ப. கிருஷ்ணன், பரஞ்சோதி, வைகைச்செல்வன், இசக்கி சுப்பையா ஆகிய முன்னாள் அமைச்சர்களுக்கும் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

சி. வளர்மதி ஆலந்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க.செல்வத்திடம் தோல்வியடைந்திருந்தார். அதேபோல கோகுல இந்திராவுக்கு அண்ணாநகர் தொகுதி மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2011ஆம் ஆண்டு வெற்றி பெற்றிருந்த இவர், 2016ஆம் ஆண்டில் மே.கே. மோகனிடம் அவர் தோல்வியடைந்திருந்தார். 

இதேபோல மொத்தம் 17 முன்னாள் அமைச்சர்களுக்குத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது, அமைச்சரவை மாற்றம் என்பது அடிக்கடி நிகழும். ஊழல் புகார் உள்ளிட்ட குற்றச்சாட்டிற்கு ஆளாகும் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும். அதேபோல ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளர் பட்டியலில் பல புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆனால் இந்த முறை திமுக அணிக்கு எதிராக மிகவும் வலுவான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக புதுமுகங்களுக்கு குறைவாகவே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாநிலங்களவை எம்பிக்களாக உள்ள 2 பேருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்பி கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளராகவும், அதிமுக எம்பி வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய அதிமுக எம்எல்ஏக்களில் 72 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதே போல மகளிர் 15 பேரும் போட்டியிடுகிறார்கள்.


No comments

Thank you for your comments