கட்சி பெயரை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் குறைப்பு
புதுடெல்லி, மார்ச் 2-
தேர்தல் நடைபெற இருக்கும் ஐந்து மாநிலங்களில் கட்சி பெயரை பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சி தொடங்க வேண்டுமென்றால் அதுகுறித்து விளம்பரம் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பும்போது 30 நாட்களில் கட்சி பெயர் பதிவு செய்யப்படும்.
இந்த நிலையில் 30 நாட்கள் என்பதை தேர்தல் ஆணையம் 7 நாட்களாக குறைத்துள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

No comments
Thank you for your comments