பரபரப்பை கிளப்பி வீடியோ வெளியிட்ட பிரபல இயக்குநர்...!- கேள்வி எழுப்பி வைரலாக்கும் நெட்டீசன்கள்...
சென்னை :
எனக்கு சொந்தத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருந்தது. அப்படி நான் கட்டிய வீட்டிற்கு இன்று பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை எதிர்த்துக் கேட்ட பின் பிரச்சனை மிகவும் பெரிதாகிவிட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன்... அடுத்த வீடியோவில் பேசுவோம்" என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த கே.எஸ்.ரவிக்குமார், தற்போது 'கூகுள் குட்டப்பன்' என்ற படத்தை தயாரித்து வருகிறார். கஷ்டப்பட்டு கட்டிய வீட்டுக்கு பிரச்சனை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு கிளம்புயுள்ளர். நெட்டீசன்கள் வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த வீடியோவில்,
நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன், ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு கணவருக்கும் அது மாதிரி எனக்கும் ஒரு கனவு இருந்தது, சொந்தத்தில் ஒரு வீடு கட்டணும், பல வருஷம் கஷ்டப்பட்டு ரிட்டயர்மென்ட் ஆகன்ற ஸ்டேஜில் ஒரு வீடு அழகான வீடு கட்டினேன். அதுல சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கும்போது ஒரு பிரச்சனை.
நம்ம என்ன கோழையா? அது எப்படி சைலண்டா இருப்போம்... அதுக்காக எதிர்த்து கேட்டா பிரச்சனை... ரொம்ப பெருசாச்சு... என்ன பண்றதுன்னே புரியல... அதனாலதான் உங்க கிட்ட பேசுறேன்..
மறுபடியும் நம்ம பேசுவோம்.. அப்போ உங்களுக்கு புரியும் அடுத்த வீடியோல பேசுவோம்..
ஆனால் என்ன பிரச்சனை, யாரால் பிரச்சனை என கே.எஸ்.ரவிக்குமார் குறிப்பிடவில்லை. முக்கிய அறிவிப்பு என்று பெயரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பாக ரசிகர்கள் பலரும் பல விதங்களில் கருத்துக்களை கேள்விகளையும் பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதால், ஏதும் அரசியல் ரீதியான பிரச்சனையா என ரசிகர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர். சில ரசிகர்கள், இது புது படத்திற்கான ப்ரோமோஷன் வேலை போல உள்ளது என்றும் பதிவிட்டுள்ளனர்.
வைரலாகி வரும் இந்த வீடியோவை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் கே.எஸ்.ரவிக்குமார் பதிவிட்டுள்ளார்.

No comments
Thank you for your comments