வங்கிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை
புதுடெல்லி:
மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய 2 தினங்களில் வங்கிகள் செயல்படும். 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கி பணி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
இன்று முதல் ஏப்ரல் 7ம் தேதி வரையிலான 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். மற்ற 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
27, 28ம் தேதி மாதத்தின் கடைசி சனிக்கிழமையாகும், ஞாயிற்றுகிழமையாகும். 29ம் தேதி ஹோலி பண்டிகை. 31ம் தேதி நிதியாண்டின் இறுதி நாளாகும். ஏப்ரல் 1ம் தேதி வங்கி கணக்கு முடிக்கும் தினமாகும். 2ம் தேதி புனித வெள்ளியாகும். 4ம் தேதி ஞயிற்றுக்கிழமை. இந்த 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
இடையில் உள்ள மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 (சனிக்கிழமை) ஆகிய 2 தினங்களில் வங்கிகள் செயல்படும். 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கி பணி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, ஹோலி பண்டிகைக்கு விடுமுறை கிடையாது. வட மாநிலங்களில்தான் விடுமுறை. இதேபோல 31-ந் தேதியும் நிதியாண்டின் இறுதி நாளன்று விடுமுறை கிடையாது என்றார்.

No comments
Thank you for your comments