நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தடுப்பு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை
புதுச்சேரி, மார்ச் 23-
கொரோனா 2வது அலைக்காக நாட்டில் மீண்டும் கொரோனா தடுப்பு பொது ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புதுச்சேரியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார். மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை கொரோனா தொற்று நோய் பரவல் இரண்டாவது அலைக்காக நாடு முழுவதும் மீண்டும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அதிக கவனம் தேவை. ஏழைகளின் வாழ்வாதாரத்தை எண்ணி பார்த்தால் ஊரடங்கு அமல் படுத்த முடியாது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சாலை வழியாக இணைக்க 287 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை வழி இணைப்பு வேலைகள் இந்த மாதத்திலேயே ஆரம்பிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக, மஹாராஷ்ட்ரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதனால் இந்தியாவில் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல பகுதிகள் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.. கொரோனா பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை செய்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று நோய் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை: 1,59,967 (நேற்றைய எண்ணிக்கை உயர்வு 212) ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 16 லட்சத்து 46 ஆயிரத்து 081 ஆக (நேற்றைய எண்ணிக்கையிலிருந்து உயர்வு 46,951 பேர்) உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments