Breaking News

பாமகவின் மூன்று கட்ட வேட்பாளர் பட்டியல் - முழுவிவரம்

சென்னை:   

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 23 தொகுதிகளில் களம் காண்கிறது.  12/03/2021ம் தேதியிட்ட 3வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது .

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

முதல் கட்டமாக பா.ம.க. சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும், 

2வது கட்டமாக 9 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் 

3வது கட்டமாக 4 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும்  வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக பா.ம.க. வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

முதற் கட்டமாக 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் படி கட்சியின் மூத்த பிரமுகர்களான 

பென்னாகரம் - ஜி.கே.மணி, 

திண்டுக்கல் ஆத்தூர் - திலகபாமா, 

கீழ்பெண்ணாத்தூர் - செல்வகுமார், 

திருப்போரூர் - திருக்கச்சூர் ஆறுமுகம், 

ஜெயங்கொண்டம் - வழக்கறிஞர் பாலு, 

ஆற்காடு - இளவழகன், 

திருப்பத்தூர் - டி.கே.ராஜா, 

தருமபுரி - வெங்கடேஷ்வரன், 

சேலம் மேற்கு - இரா அருள்,

செஞ்சி - எம்பிஎஸ் ராஜேந்திரன்

இரண்டாம் கட்டமாக 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாமக.

மயிலாடுதுறை - சித்தமல்லி ஏ.பழனிச்சாமி, 

விருத்தாசலம் - ஜே.கார்த்திகேயன், 

சேப்பாக்கம் - ஏ.வி.ஏ கஸ்ஸாலி, 

நெய்வேலி - கோ.ஜெகன், 

கும்மிடிப்பூண்டி - எம்.பிரகாஷ், 

சோளிங்கர் - அ.ம.கிருஷ்ணன், 

கீழ்வேளூர் (தனி) - வேத முகுந்தன், 

காஞ்சிபுரம் - பெ.மகேஷ்குமார்  

 மைலம் - சி.சிவகுமார் 

மூன்றாம் கட்டமாக 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாமக.

மேட்டூரில்  - எஸ். சதாசிவம், 

பூந்தமல்லி (தனி) -  முன்னாள் எம்எல்ஏ எஸ்.எக்ஸ் ராஜமன்னார், 

சங்கராபுரம் - மருத்துவர். ராஜா, 

வந்தவாசி (தனி) - எஸ். முரளி சங்கர் 

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டார்.

முன்னதாக, பூந்தமல்லி தொகுதியை பாமகவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து அதிமுகவினர் சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் பூந்தமல்லி தொகுதிக்கு பாமக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.








No comments

Thank you for your comments