Breaking News

பவானிசாகர் அதிமுக வேட்பாளர் பண்ணாரி தீவிர வாக்கு சேகரிப்பு

 ஈரோடு, மார்ச் 25-

பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையம்பள்ளி ஊராட்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்


ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக சார்பில் பெரிய கள்ளிப்பட்டி சேர்ந்த பண்ணாரி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுக வேட்பாளர்கள் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையம்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள மல்லியம்பட்டி உயிலம்பாளையம்  பனையம்பள்ளி ஆணைகட்டி புஜங்கனூர் சொலவனூர் ஆகிய கிராம பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். 

அப்போது அவருக்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் அதனைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பண்ணாரி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.கே.சின்னசாமி பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது உடன் இருந்தனர்.

No comments

Thank you for your comments