கார்களில் ஏர் பேக் கட்டாயம்.... மத்திய அரசு அறிவிப்பு...
புதுடெல்லி :
கார்களில், முன்னே இருக்கும் இரு இருக்கைகளுக்கும் உயிர் பாதுகாக்கும் கருவியான, ஏர்-பேக் (Air bag) கட்டாயம் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
காரின் ஓட்டுநர் இருக்கைக்கு கட்டாயம் ‘ஏர் பேக்’ இருக்க வேண்டும் என்ற விதிமுறை 2019-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஓட்டுநருக்கு மட்டும் ஏர் பேக் வசதி இருப்பதால் முன் இருக்கையில் பயணிப்போரின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. இதனால் விபத்தின் போது முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள் படுகாயமடையவும் உயிரிழக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
அதன் காரணமாக தற்போது முன் இருக்கையில் பயணிப்போரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஏர் பேக் வசதியை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவின்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிதாக வடிவமைக்கும் கார்களில் முன் இரு இருக்கைகளுக்கும் ஏர்-பேக் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட கார்களில் வருகிற ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள், ஏர்-பேக்-ஐ பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவால் கார்கள் விலை சற்று உயரலாம் எனக் கூறப்படுகிறது.




No comments
Thank you for your comments