மலை கிராமத்தில் ஏ.பி.நந்தகுமார் வாக்கு சேகரிப்பு-ஆதரவளித்த மக்கள்
அணைக்கட்டு, மார்ச் 29&
அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
தற்போது அவருடைய தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் அங்கு திமுக வெற்றி வாகை சூடிட ஒன்றிய செயலாளர் மு.பாபு உட்பட, கூட்டணி கட்சியினரான வி.சி.க. முஸ்லீம் லீக் என கூட்டணியினரின் ஒத்துழைப்பு மற்றும் தீவிர பிரச்சாரத்தால் வெற்றி வேட்பாளராக ஏ.பி. நந்தகுமார் வாக்கு சேகரித்து வருகிறார்..
கிறிஸ்தவர்கள் குருத்து ஒலை ஞாயிறு தினத்தை நேறறு கொண்டாடினர். கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து வேட்பாளர் நந்தகுமார் குருத்து ஒலை ஏந்தி நிகழ்வில் பங்கேற்றார்.
மேலும், அணைக்கட்டு தொகுதி மலை கிராமமான பீஞ்சமந்தை, ஜார்தான் கொல்லை, பலாம்பட்டு உள்ளிட்ட பகுதிகள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி. நந்தகுமார் வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு அன்பிலும் ஆதரவிலும் அலைகடலென திரண்டு மக்கள் வரவேற்பும், ஆதரவும் அளித்தனர். ஒட்டு மொத்த மலைகிராமத்தினர் அங்கு திரண்டு குவிந்தனர்.
அப்படியிருக்க தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் நல்லகாலம் பொறக்குது என்று ஒரு குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்தவர் அணைக்கட்டு தொகுதியில் நந்தகுமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
முன்னதாக நேற்று காலை டிகேஎம் கல்லூரி பின்புறம் கணபதி நகர் பகுதிகளிலும் வாக்குசேகரித்தார். வானவேடிக்கை, பட்டாசு என கொண்டாட்டத்துடன் வாக்கு சேகரித்தனர்.
No comments
Thank you for your comments