காட்பாடியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பு!
வேலூர், மார்ச் 29-
காட்பாடி சட்டசபை தொகுதி திமுக வேட்பாளரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் காட்பாடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காட்பாடி சட்டசபைத் தொகுதியின் திமுக வேட்பாளர் துரைமுருகன் எம்எல்ஏ, காட்பாடி வடக்கு பகுதி எம்.ஜி.ஆர். நகர், நேரு தெரு (செங்குட்டை), மற்றும் மாரியம்மன் கோவில் தெரு, மிஷன் காம்பவுண்ட், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். திமுக வேட்பாளருடன் துரைசிங்காரம், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பகுதி கழக செயலாளர் ஜி.வன்னியராஜா, வட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக, வட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், அணிகளின் அமைப்பளார்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்துகொண்டனர். பெண்கள் வழிநெடுகிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுத்து வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments