Breaking News

தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் ஆய்வு

ஈரோடு, மார்ச் 10-

ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன்  அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையமான ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உட்பட வாக்குசாவடி மையங்களில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.



இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 06.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து, 02.05.2021 அன்று 8 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், சித்தோடு சாலை போக்குவரத்து மற்றும் பெரியியல் கல்லூரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளது. 

அதனைத் தொடர்ந்து, நேற்று ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  சி.கதிரவன்  அவர்கள் வாக்கு எண்ணும் மையமான, ஈரோடு மாவட்டம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம் ஆகியவை குறித்து நேற்று (09.03.2021) ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, கரட்டடிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நல்லகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பழனியம்மாள் உயர்நிலைப்பள்ளி, மொடச்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குள்ளம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காசிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இண்டியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சாரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அங்கனகவுண்டன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

அதனைத்தொடர்ந்து கோபி-கரட்டூர் சாலை மற்றும் கோவை பிரிவு ஆகிய பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர் வாகன பரிசோதனை மேற்கொள்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

மேலும், பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு, மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலக இலவச தொலைபேசி எண் 18004250424 மற்றும் 1950 அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்.0424-2257901, 2256782, 2251863 மற்றும் 2256524 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

இந்த ஆய்வின்போது, கோபிசெட்டிபாளையம் தேர்தல் நடத்தும் அலுவலர் / வருவாய் கோட்டாட்சியர் திருமதி.பழனிதேவி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments