Breaking News

குடுகுடுப்பைகாரர் வேடத்தில் தேர்தல் விழிப்புணர்வு

வேலூர், மார்ச் 10-

முதல்முறை வாக்காளர்கள் கண்டிப்பா ஓட்டு போடுங்க. ஜக்கம்மா சொல்றா 100 சதவீதம் எல்லோரும் ஓட்டு போடுங்க என்று கூறி அவர் குடுகுடுப்பை முழங்கியபடி சென்றார். 



வேலூர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  வேலூர் டி.கே.எம். மகளிர் கல்லூரியில் 100 சதவீத வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் நாட்டுப்புற நடனம் ஆடி 100 சதவீத வாக்களிக்க கோரி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குடுகுடுப்பைக்காரர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்அ.சண்முகசுந்தரம் இதில் கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு திட்ட அலுவலர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் துறை கோமதி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம்செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

டி.கே.எம். கல்லூரி மாணவர்கள் 100% வாக்களிப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் பேசியதாவது.

நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் 100% தவறாமல் வாக்களித்து தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும். 30 முதல் 80 வயது உடையவர்கள் ஆர்வமாக வாக்களிக்கிறார்கள். 18 முதல் 19 வயதுடைய முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்கள் தவறாது வாக்களித்து தங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்களையும் தங்களது கிராமத்தில் உள்ளவர்களையும் வாக்களிப்பதின் அவசியத்தை எடுத்துக் கூறி வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறினார். 

டி.கே.எம். கல்லூரியில் அங்கன்வாடி பணியாளர்கள் நடனம் மற்றும் நாடகம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். குடுகுடுப்பைக்காரர் குறி சொல்வதைப் போல ஏப்ரல் 6 ஆம் தேதி அனைத்து வாக்குரிமையுள்ள மாணவர்களும் வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து, ஊரிஸ் கல்லூரியில்  100% வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதிமொழி வாசிக்க அனைத்து பேராசிரியர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சித்தலைவர் கட்டை விரலில் மை தடவி கைரேகை மூலம் கையெழுத்திட்டார். அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.

குடுகுடுப்பைக்காரர் ஒருவர் ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா... நல்ல காலம் பொறக்குது.. நல்ல காலம் பொறக்குது... ஏப்ரல் 6-ந்தேதி எல்லாரும் ஓட்டு போடுங்க. முதல்முறை வாக்காளர்கள் கண்டிப்பா ஓட்டு போடுங்க. ஜக்கம்மா சொல்றா 100 சதவீதம் எல்லோரும் ஓட்டு போடுங்க என்று கூறி அவர் குடுகுடுப்பை முழங்கியபடி சென்றார். 

இந்த நிகழ்ச்சி மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதேபோல் கல்லூரி வளாகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 100 சதவீதம் வாக்கு என்ற வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில்  டி.கே.எம் கல்லூரி தாளாளர் திரு.மணிநாதன், ஊரிஸ் கல்லூரி முதல்வர் திரு.நெல்சன் விமல்நாதன், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி.சுஜாதா, கண்காணிப்பாளர் திருமதி. சில்வியா வினோதினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அருண்குமார், புள்ளியல் ஆய்வாளர் திரு.முத்துக்குமார், மகளிர் திட்ட உதவி அலுவலர் திரு.திருமணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

No comments

Thank you for your comments