பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழா
ஈரோடு:
பண்ணாரிஅம்மன் கோவில் குண்டம் திருவிழா தலைமை பூசாரி ராஜேந்திரன் உட்பட 11 பேர் மட்டுமே (தீ) குண்டம் இறங்கினர் ... ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல் நாள் இரவு முழுவதும் காத்திருந்து நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் மட்டுமே செய்தனர்...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி வனப்பகுதி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோயில். இந்த ஆலயமானது மிகவும் உலகப் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும்.
ஆண்டு தோறும் பங்குனி மாதம் 15 நாட்கள் குண்டம் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதற்காக தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து குண்டம் திருவிழா அன்று குண்டம் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தி வழிபடுவது வழக்கம். இதற்காக பக்தர்கள் வருகைக்காக அடிப்படை வசதிகள், பேருந்து வசதிகள், கலைநிகழ்ச்சிகள் என வெகுசிறப்பாக நடைபெரும்.
கொரோனா வைரஸ் நோய் தொற்றால் கடந்த ஆண்டு குண்டம் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா நடைபெறும் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், கொரோனா வைரஸ் நோய் தொற்று மீண்டும் தலைதூக்கி உள்ளதால் தமிழக சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ குண்டம் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணாரி அம்மன் குண்டம் நிகழ்ச்சியில் பூசாரிகள் உட்பட 11பேர் மட்டும் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டது. பக்தர்களுக்கு குண்டம் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதனை அடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் மட்டுமே செய்ய காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என இந்து அறநிலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
கடந்த 15ம் தேதி அன்று பூசாட்டுதலுடன் குண்டம் திருவிழா துவங்கியது அதனை தொடர்ந்து அம்மனுக்கு பீனாச்சி வாத்தியத்துடன் தினம் தோறும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முக்கிய திருவிழாவான தீ குண்டம் நிகழ்ச்சி கோவில் முன்பு 6அடி நீளத்தில் 4 அடி அகலத்தில் தீ குண்டம் அமைக்கப்பட்டது. இதில் இன்று (30/03/2021) அதிகாலை 12 மணிக்கு குண்டம் தீ மூட்டப்பட்டு 3 மணியளவில் தெப்பக்குளம் சென்று அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்துஅதிகாலை 3.50 மணியளவில் கோவில் பூசாரி ராஜேந்திரன் குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து கோவில் பூசாரிகள் 2 பேர் அறங்காவலர்கள் 8 பேர் என 11பேர்மட்டுமே தீ குண்டம் இறங்கினர். அதன் பின் அரசு உத்தரவு படி குண்டம் பகுதி மூடப்பட்டது.
அம்மனை தரிசிப்பதற்காக முதல் நாள் இரவே நூற்றுக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மன் ஆலயப் பகுதியில் தங்கியிருந்து காலை 6 மணிக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.200க்கும் மேற்பட்ட போலிசார் காவல் பணியில் ஈடுபட்டனர்.

No comments
Thank you for your comments