தர்மபுரி மாவட்டதில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு
தர்மபுரி:
தமிழக சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடக்க இருக்கும் நிலையில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்து தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றனது.
தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் தேர்தல் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறை சார்பில் மதிகோன் பாளையம். கோட்டப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, கம்பைநல்லூர், பெரும்பாலை, மாரண்டஅள்ளி, அதியமான் கோட்டை, அரூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு ஆகிய 15 காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவ வீரர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், சட்டம்-ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என அனைவரும் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பு ஆனது சட்டசபை தேர்தலையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பொது மக்களிடையே அச்சத்தை போக்கவும் தைரியமாக பொதுமக்கள் அனைவரும் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியும் நடைபெற்றது.


No comments
Thank you for your comments