Breaking News

சென்னை பெருநகர காவல் துறை நீர், மோர் விநியோகம்!

சென்னை, மார்ச் 2-

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நீர், மோர் வழங்கி அவர்கள் களைப்பு ஆற்றிடச் செய்தார்.


கோடை காலம் தொடங்கியதால் சென்னை பெருநகரில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் வெயிலில் நின்றவாறு போக்குவரத்து சீர் செய்து வரும் போக்குவரத்து காவலர்கள் பணி செய்யும் இடங்களில் நீர், மோர் வழங்கும் நிகழ்வு தொடங்கப்பட்டது. முதல் நாளான நேற்று சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், அண்ணா ரோட்டரி. ஜெமினி மேம்பாலம் அருகில் போக்குவரத்து பணி செய்து வரும் காவல் ஆளினர்களுக்கு அதிகாரிகளுடன் நேரில் சென்று நீர், மோர் வழங்கி பணியுடன் உடல் நலத்தை பேண வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். ஆணையர் வழங்கிய நீர், மோர் ஆகியவற்றை பருகிய போக்குவரத்து காவலர்கள் சற்று களைப்பு ஆற்றி கொண்டு மீண்டும் பணியில் ஈடுபட்டனர். போக்குவரத்து காவலர்கள் புத்துணர்ச்சியுடன் பணியில் ஈடுபட வேண்டும என்றும் தகுந்த அறிவுரைகள் வழங்கி காவலர்களை ஊக்கமும், உற்சாகமும் படுத்தினார் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்.

No comments

Thank you for your comments