மநீம போட்டியிடும் 70 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் பட்டியல் – கமல்ஹாசன் வெளியிட்டார்.
சென்னை:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் முதல் வேட்பாளா் பட்டியலை அக் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் புதன்கிழமை (10-3-2021) அன்று வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.
சமக, ஐஜேகே ஆகிய கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 154 தொகுதிகளில் மநீம போட்டியிட உள்ளது.
மநீம - முதல் வேட்பாளா் பட்டியல்
முதல் வேட்பாளா் பட்டியலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் புதன்கிழமை வெளியிட்டார்.
அப்துல்கலாமின் முன்னாள் ஆலோசகா் பொன்ராஜ் அண்ணாநகா் தொகுதியிலும்,
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு வில்லிவாக்கம் தொகுதியிலும்,
பாடலாசிரியா் சினேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா்.
முதல் பட்டியலில் கமல்ஹாசன் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படவில்லை.
மநீம போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி - வேட்பாளா் விவரம் பற்றி கீழே தரப்பட்டுள்ளது.
முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்
1 மதுரவாயல் - பத்மபிரியா,
2 மாதவரம் - ரமேஷ் கொண்டலசாமி,
3 ராதாகிருஷ்ணன்நகர் - ஃபாசில்,
4 பெரம்பூர் - பொன்னுசாமி,
5 வில்லிவாக்கம் - டாக்டர். சந்தோஷ் பாபு,
6 எழும்பூர் -பிரியதர்ஷினி,
7 அண்ணா நகர் - பொன்ராஜ்,
8 விருகம்பாக்கம் - சினேகன்,
9 சைதாப்பேட்டை - சினேகா மோகன்தாஸ்,
10 பல்லாவரம் - செந்தில் ஆறுமுகம்
11 தாம்பரம் - சிவ இளங்கோ,
12 திருப்போரூர் - லாவண்யா,
13 காஞ்சிபுரம் - கோபிநாத்,
14 ஓசூர் - மசூத்,
15 பாலக்கோடு - ராஜசேகர்,
16 பென்னாகரம் - கே.ஷகிலா,
17 தி.மலை - அருள்,
18 செய்யாறு - மயில்வாகனன்,
19 ஓமலூர் - வி.ஸ்ரீனிவாசன்,
20 மேட்டூர் - அனுசியா
21 நாமக்கல் - அதாம் ஃபரூக்,
22 குமாரபாளையம் - காமராஜ்,
23 ஈரோடு கிழக்கு - ஏஎம் ஆர் - ராஜ்குமார்,
24 ஈரோடு மேற்கு - துரை சேவகன்,
25 மொடக்குறிச்சி - ஆனந்தம் ராஜேஷ்,
26 பெருந்துறை - சி.கே நந்தகுமார்,
27 உதகை - டாக்டர். சுரேஷ் பாபு,
28 குன்னூர் - எச்.பி ராஜ்குமார்,
29 கூடலூர் - ஜே. பாபு,
30 மே.பாளையம் - கே.லட்சுமி,
31 அவினாசி - ஏ.வெங்கடேஷ்வரன்,
32 திருப்பூர் வடக்கு - சிவபாலன்,
33 திருப்பூர் தெற்கு - அனுஷா ரவி,
34 பல்லடம் - மயில்சுவாமி,
35 சூலூர் - ரங்கநாதன்,
36 கிணத்துக்கடவு - ஏ.சிவா,
37 வால்பாறை - டி.செந்தில்ராஜ்,
38 மடத்துக்குளம் - கே. குமரேசன்,
39 பழனி - பி. பூவேந்தன்,
40 திண்டுக்கல் - ராஜேந்திரன்
41 அரவக்குறிச்சி - முகமது அனிஃப் ஷாயில்,
42 திருச்சிராப்பள்ளி கிழக்கு - வீரசக்தி,
43 திருவெறும்பூர் - முருகானந்தம்,
44 முசிறி - டாக்டர் கோகுல்,
45 துறையூர் -யுவராஜ்,
46 குன்னம் - ஷாதிக் பாட்ஷா,
47 பண்ருட்டி - ஜெயலானி,
48 மயிலாடுதுறை - ரவிச்சந்திரன்,
49 நாகப்பட்டினம் - அனாஸ்,
50 கீழ்வேலூர் - டாக்டர் சித்து ஜி,
51 பட்டுக்கோட்டை - டாக்டர் சதாசிவம்,
52 விராலிமலை - சரவணன் ராமதாஸ்,
53 புதுக்கோட்டை - எஸ்.மூர்த்தி,
54 திருமயம் - ஆர்.திருமேனி,
55 ஆலங்குடி - வைரவன்,
56 காரைக்குடி - ராஜ்குமார்,
57 மேளூர் - கதிரேசன்,
58 சோழவந்தான் - யோகநாதன்,
59 மதுரை மேற்கு - முத்துகிருஷ்ணன்,
60 திருமங்கலம் - ராம்குமார்
61 ஆண்டிப்பட்டி - எஸ். குணசேகரன்,
62 போடி - கணேஷ்குமார்,
63 கம்பம் - வேதா வெங்கடேஷ்,
64 திருவில்லிப்புத்தூர் - குருவய்யா,
65 அருப்புக்கோட்டை -உமாதேவி,
66 பரமக்குடி -கருப்புராஜ்,
67 கோவில்பட்டி - ஜி கதிரவன்,
68 க.குமரி -பி.டி.செல்வகுமார்,
69 நாகர்கோவில் - மரியா ஜேக்கப் ஸ்டான்லி,
70 குளச்சல் - லதீஷ் மேரி



No comments
Thank you for your comments