Breaking News

கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க அலுவலர் நியமனம்

கடலூர், மார்ச் 5-

 தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வரப்பெற்றுள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள், கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் பொருட்டு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

மதுபான கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்  ரவிக்குமார் மற்றும் கடலூர் டாஸ்மாக் உதவி மேலாளர் (கணக்கு)  தேவகண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.   ரவிக்குமார் மாவட்ட மேலாளர் டாஸ்மாக் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இப்பணிகளை மேற்க்கொள்வார்.   தேவகண்ணன் உதவி மேலாளர் மாவட்டம் முழுவதும் கண்ணானிப்பு பணிகளில் இருப்பார். புகார்கள் ஏதும் இருப்பின் கீழ்கண்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். 

1.ரவிக்குமார், கடலூர் மாவட்ட மேலாளர் - அலைபேசி எண்.9443636745

2.தேவகண்ணன், உதவி மேலாளர் - அலைபேசி எண். 9750498912

No comments

Thank you for your comments