அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை, மார்ச் 5-
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், போடிநாயக்கனூரில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
1. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர்(200) தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர்
நிதி, திட்டம், சட்டமன்றம், தேர்தல்கள் மற்றும் கடவுச் சீட்டுகள், வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, குடிசை மாற்று வாரியம் மற்றும் இடவசதிக் கட்டுப்பாடு, நகரமைப்புத் திட்டமிடல், நகர்ப்பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அமைச்சர்.
2. சேலம் மாவட்டம் எடப்பாடி(86) தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி.
கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழக தலைமை நிலையைச் செயலாளர், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்.
பொது, இந்திய ஆட்சிப்பணி,இந்தியக் காவல் பணி,இந்திய வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள்,காவல், உள்துறை, பொதுப்பணிகள், சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம் மற்றும் செயற் திட்டப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர்.
3. சென்னை ராயபுரத்தில்(17) அமைச்சர் டி. ஜெயக்குமார்.
கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர், வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்.
மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் .
![]() |
4. விழுப்புரத்தில்(74) அமைச்சர் சி.வி.சண்முகம்.
கழக வழிகாட்டுக் குழு உறுப்பினர், விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர்.
சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை மற்றும் கனிம வளத் துறை அமைச்சர்
5. தூத்துகுடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம்(216) தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் M.L.A.,
தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்
![]() |
S. Thenmozhi -Nilakottai (SC) |
6. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை(130) தனிதொகுதியில் எஸ். தேன்மொழி M.L.A.,
திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழக இணைச் செயலாளர்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
No comments
Thank you for your comments