அமமுகவில் நேர்காணல் தேதி அறிவிப்பு...
சென்னை, மார்ச் 5-
மார்ச் 10-ம் தேதிக்கு பதில் வருகிற 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் விருப்ப மனு அளிக்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற பேரவைகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தலைமை கழகத்தில் கடந்த 3ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
6.4.2021 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோருபவர்களுக்கு வருகிற 7ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை மட்டுமே விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதனைத் தொடர்ந்து விருப்ப மனு செலுத்தியவர்களுக்கான நேர்காணல் வருகிற 8 மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments