Breaking News

6ம் தேதி முதல் தொடங்குகிறது தேமுதிக வேட்பாளர் நேர்காணல்


சென்னை, மார்ச் 3-

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் வருகிற 6ம் தேதி முதல் தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் வருகிற 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது. 

அதன் விவரம் வருமாறு (மாவட்ட வாரியாக),  6ம் தேதி காலை 10.35 மணிக்கு கோவை, நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், தேனி. மதியம் 2 மணிக்கு கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர்.  7ம் தேதி காலை 9 மணிக்கு தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், திருப்பூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி. மதியம் 2 மணிக்கு தஞ்சை, சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு.

8ம் தேதி காலை 9 மணிக்கு மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம். மதியம் 2 மணிக்கு திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments