Breaking News

6, 7ம் தேதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் நேர்காணல்...!


சென்னை, மார்ச் 3-  

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேர்காணல் நடைபெற உள்ளது. விருப்பமனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும்  நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு  கே.எஸ்.அழகிரி நேற்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று (02.03.2021) கூறி இருப்பதாவது, 



2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு  காங்கிரஸ் கட்சியில்   வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து  பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த  அனைவரிடமும்  மார்ச் 6 மற்றும் 7 - தேதிகளில்  சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல்  நடைபெறவுள்ளது.

விருப்பமனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும்  நேர்காணலில் அவசியம்  பங்கேற்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். தனது முகநூல் பக்கத்திலும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments