அமெரிக்க வீரர்களை குறிவைத்து பயங்கர ராக்கெட் தாக்குதல்!
ஈராக், மார்ச் 3-
ஈராக்கில் உள்ள ஐன் அல் ஆசாத் இராணுவ தளம் மீது சரமாரியாக பயங்கர ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஈராக்-அமெரிக்க படைகள் இருக்கும் அல் அன்பர் மாகாணத்தில் உள்ள ஐன் அல் ஆசாத் இராணுவ தளம் மீதே இந்த பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 10 ராக்கெட்டுகள் ஐன் அல் ஆசாத் இராணுவ தளத்தை தாக்கியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப்பெற்ற போராளிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து ஈராக்கின் சிறப்பு படை விசாரணை முன்னெடுத்துள்ளது. தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், 2020 ஜனவரி 8ம் திகதி அன்று ஈராக்கில் உள்ள இரண்டு இராணுவ தளங்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது, அதில் ஒன்று ஐன் அல் ஆசாத் இராணுவம் தளம் என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Thank you for your comments