Breaking News

விஷ்வ ரூபம் எடுத்த பாலியல் புகார்.... கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. சிபிசிஐடி அதிரடி

சென்னை, மார்ச் 1:

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.  



தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் தனக்கு பாலியல் சொந்தரவு அளித்ததாக டெல்டா மாவட்டத்தில் எஸ்.பியாக பணியாற்றும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் அளித்த பாலியல் புகார் விஸ்வரூமெடுத்துள்ளது.

இந்தப் புகார் தொடர்பாக விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில்  6 பேர் கொண்ட விசாகா கமிட்டியை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜேஷ் தாஸ் சட்டம் ஒழுங்கு பிரிவின் சிறப்பு டிஜிபி பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ளார்.

மேலும் இந்த புகாரை விசாரிக்க சிபிசிஐடிக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.   இதையடுத்து, டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது வழக்கு விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பியை தடுத்து மிரட்டியதாக செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இது காவல் துறை வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் பெரும் சலசலப்பை  ஏற்படுத்தி உள்ளது...


No comments

Thank you for your comments