மாத தொடக்கத்திலேயே .. ஆரம்பித்த அதிர்ச்சி... சிலிண்டர் விலை உயர்வு...
சென்னை, மார்ச் 1-
சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் கேஸ் சிலிண்டர் விலை ரூ.810-லிருந்து ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோக மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 முறை ஏற்றப்பட்டது. டிசம்பர் 1ம் தேதியும், 15ம் தேதியும் தலா 50 என 100 விலையேற்றம் செய்தனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 3 முறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், பிப்ரவரி 15-ம் தேதி மேலும் 50 ரூபாய் அதிகரித்து கேஸ் சிலிண்டர் விலை 785 ரூபாயாக இருந்தது. இதனை தொடர்நது மேலும் பிப்ரவரி 25ம் தேதி மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 810 ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஒரே மாதத்தில் 3 முறை சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டதுடன் மானியமும் வங்கிகளில் முறையாக வரவு வைக்கப்படாததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மாதம் தொடக்கத்தில் முதல் நாளான இன்று சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்துள்ளதால் ஒரு சிலிண்டரின் விலை ரூ.810-லிருந்து ரூ.835 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.125 உயர்ந்து ரூ.835 ஆக தற்போது அதிகரித்துள்ளது.
மிகக் குறைந்த அளவில் வாய்க்கும் வயிற்றுக்கும் ஆக வாழ்க்கை நடத்தும் நடுத்தர வகுப்பு மக்களும் ஏழை மக்களும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக தங்கள் வாழ்க்கையை நடத்த பெரிதும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிப்.25ம் தேதி விலை உயர்வு அறிவித்து 5 நாட்களுக்குள் மீண்டும் விலை உயர்த்தியது மக்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது...
இவ்வாறு தொடர்ந்து இவற்றின் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து மற்ற பொருள்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. அத்தகைய விலை உயர்வும் பணவீக்கமும் நடுத்தர வகுப்பு மக்களுக்கு பெரும் அச்சத்தை தருவதாக உள்ளன. இதற்கு இல்லத்தரசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்தியாவின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 100 தாண்டிவிட்டது...
அதே போன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1000த்தை தாண்ட வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது...
இது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும்... மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்....

No comments
Thank you for your comments