Breaking News

நாளை 9 மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேர்காணல்-தேர்வு...

சென்னை 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நடத்துகிறார். இந்த நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை முதல் வருகிற 6ம் தேதி வரை நடைபெறுகிறது.



சட்டசபை தேர்தல் பணிகளில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கி விட்டது. தி.மு.க. சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நடத்துகிறார். இந்த நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை முதல் வருகிற 6ம் தேதி வரை நடைபெறுகிறது.  

நாளை (02-03-2021) தொடக்க நாளில் 9 மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது.  காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, நெல்லை கிழக்கு, மத்தி, தென்காசி வடக்கு, தெற்கு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.  மாலை 4 மணிக்கு விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு வேட்பாளர் தேர்வு நடக்கிறது.  தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல் காரணமாக அண்ணா அறிவாலயம் களை கட்டுகிறது.

No comments

Thank you for your comments