10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்த திட்டம்
சென்னை, மார்ச் 4-
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறித்தேர்வு நடத்த தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
நடப்பு கல்வியாண்டில் 9, 10, மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் இருந்து 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் பாடப்பிரிவுகளை பிரித்துக் கொடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அதனை தவிர்ப்பதற்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 350 தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்ததும் திறனறித்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments
Thank you for your comments