Breaking News

விஜயகாந்த்தை எதிர்க்கட்சித் தலைவராக்கிய ரிஷிவந்தியம்!

தியாகதுருகம், மார்ச் 4-

கேப்டன் விஜயகாந்த்தை எதிர்கட்சித் தலைவராக்கிய பெருமை ரிஷிவந்தியம் தொகுதிக்கு உண்டு.

ரிஷிவந்தியம் தொகுதியில் 2011 தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டு வென்றதால் பிரபலமடைந்தது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டார்.அதுவரை தமிழகத்தில் அதிகம் அறியப்படாமல் இருந்த இத்தொகுதி திடீர் என அனைவராலும் உற்று நோக்கப்பட்டது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து விஜயகாந்த் இத்தொகுதியில் களம் கண்டார். 

இவரை எதிர்த்து காங்., கட்சி வேட்பாளராக மறைந்த திருக்கோவிலூர் சிவராஜ் போட்டியிட்டார். இவர் இத்தொகுதியில் 4 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு செல்வாக்குடன் இருந்தார். இத்தேர்தலில் விஜயகாந்த் 91ஆயிரத்து 164 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிவராஜை விட 30 ஆயிரத்து 795 ஓட்டுகள் அதிகம் பெற்றார். இத்தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். விஜயகாந்த் போட்டியிட்டு வென்றதால் ரிஷிவந்தியம் தொகுதி தமிழகத்தில் பிரபலமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments