மரபணு மாற்றம் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கண்டுபிடிப்பு!
சண்டிகர், பிப்.25-
இந்தியாவிலும் மரபணு மாற்றம் பெற்று புதிய கொரோனா வைரஸாக உருவெடுத்துள்ள புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று சண்டிகார் நகரிலுள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி பட்டமேற்படிப்பு நிறுவன இயக்குனர் பேராசிரியர் ஜகத்ராம் தெரிவித்தார்.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ்கள் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோணா வைரஸ் போல ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிகவிரைவாக தொற்றிக்கொள்ளும் திறன் பெற்றுள்ளது எனவே நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெருகாமல் கட்டுப்படுத்த தேவையான எல்லா கட்டுப்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்தாக வேண்டும். இங்குள்ள மருத்துவமனைகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட 55 நோயாளிகள் உள்ளனர். கடந்த இரு வார காலத்தில் ஏற்பட்ட தொற்றுகளால் இந்த அளவு எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்று ஜகத் ராம் தெளிவுபடுத்தினார்.

No comments
Thank you for your comments