Breaking News

காவல்துறை உயர் அதிகாரி மீது பாலியல் புகார்.... விசாகா கமிட்டி அமைப்பு....

 சென்னை, பிப்.25-

சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது பெண் எஸ்பி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது குறித்து விசாரிக்க, விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. 



புகாரில் சிக்கிய அதிகாரி டிஜிபி அந்தஸ்த்தில் இருப்பதால் பெண் ஐஏஎஸ் அதிகாரியான திட்டம் மற்றும் மேம்பாட்டு துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீரகுநந்தன் தலைமையில் 6 அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. 

பெண் கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி, டிஜிபி அலுவலக  முதன்மை நிர்வாக அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் சமூக ஆர்வலர் லோரேட்டா ஜோஹ்னா உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதனிடையே புகாருக்குள்ளான சிறப்பு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து, கிரிமினல் வழக்குப்பதிவு செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது

No comments

Thank you for your comments