Breaking News

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக மங்கு ஹனுமந்த் ராவ் நியமனம்

மதுரை, பிப்.24-

மதுரை மாவட்டம் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த பேராசிரியரான மங்கு ஹனுமந்த ராவ் திருப்பதி எஸ்.வி மெடிக்கல் சயின்ஸ் நிறுவன தலைவராக உள்ளார். 4 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனர்களை மத்திய அரசு நியமினம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குனராக மங்கு ஹனுமந்த ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரில் உள்ள விஜய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை, குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனை, இமாச்சல பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை  ஆகியவற்றுக்கும் புதிய நிர்வாக இயக்குனர்களை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments

Thank you for your comments