Breaking News

மதுவிலக்கு வழக்குகளில் பறிப்பிழப்பு செய்த வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

திருவள்ளூர், பிப்.24-

மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 48 வாகனங்களை ஏலம் விடப்படவுள்ளது  என்று& மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 37 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 8 நான்கு சக்கர வாகனங்களை வருகின்ற 26.02.2021&ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணியளவில் திருவள்ளுர் மதுவிலக்கு அமல்பிரிவு, அலுவலகத்தில் (இருப்பிடம் திருவள்ளுர் இரயில் நிலையம் மற்றும் துளசி தியேட்டர் அருகில்) ஏலம் விடப்பட உள்ளது. 

வாகனங்களை ஏலம் கேட்க விரும்புவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக ரூ. 1000/- (ரூபாய் ஓராயிரம் மட்டும்) செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் அரசு விற்பனை வரியாக இரண்டு சக்கர வாகனத்திற்கு 12%, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18%  உடனடியாக செலுத்திட வேண்டும்.  ஏலத்தில் கலந்துகொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு அவர்கள் செலுத்திய முன் வைப்பு கட்டணத் தொகையினை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அவர்கள் தெரிவிக்கிறார்.


No comments

Thank you for your comments