செவிலியர்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
குமரி, பிப்.24-
குமரி மாவட்டம் வடசேரியில் உள்ள துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் முன்பு கிராம செவிலியர்கள் மற்றும் பொது சுகாதார ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுகாதார துறையில் வி.ஹெச்.என்., சி.ஹெச்.என்., போன்ற சுகாதார செவிலியர் மற்றும் பொது சுகாதார செவிலியர்கள் அதிக பணிச்சுமை, உரிய ஊதியம் வழங்காமை, பதவி உயர்வில் பாரபட்சம் காட்டுவது , பாலியல் தொந்தரவுகள் வேறு பிரச்சனைகள் காரணமாக செவிலியர்கள் தற்கொலை செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. திண்டுக்கல்லில் இந்த பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சுகாதார செவிலியரின் இறப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

No comments
Thank you for your comments