Breaking News

இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் கட்டாயம்

புதுடெல்லி, பிப்.15-

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளை கடக்கும்  எந்தவொரு வாகனமும் பிப்ரவரி 15ம் தேதி நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் இல்லாமல் கடந்தால் இரட்டிப்பாக கட்டணம் செலுத்த நேரிடும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


பிப்ரவரி 16ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்ட் டேக் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஃபாஸ்ட் டேக் பொருத்துவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது.

சுங்கச் சாவடியைக் கடக்கும் அனைத்து வாகனங்களிலும் ‘ஃபாஸ்டேக்’ வில்லையைப் பொருத்துவது 2021 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார், ஆனால், தற்போது அதற்கான கால அவகாசம் 2021  பிப்ரவரி 15&ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குவதற்காக வாகனங்களில் ‘ஃபாஸ்டேக்’ வில்லையைப் பொருத்துமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி, வாகனங்களின் கண்ணாடியில் அந்த வில்லைகள் பொருத்தப்படும். ஃபாஸ்டேக்’ வில்லைகளில் அவ்வப்போது தொகையை வரவு வைத்துக் கொள்ளலாம். 

சுங்கச் சாவடிகளை அந்த வாகனங்கள் கடக்குக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, ‘ஃபாஸ்டேக்’ வில்லை வாயிலாகக் கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும்.  இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும்.  இந்த நடைமுறை ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்டது. 

தற்போது பிப்ரவரி 15ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளை கடக்கும் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டேக் ஒட்ட வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

அவகாசம் பல முறை நீக்கப்பட்டு விட்டதால் நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்ட் டேக் அமலுக்கு வருகிறது. இல்லையென்றால் சுங்கச்சாவடிகளில் இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.


No comments

Thank you for your comments