பிரதமர் மோடியுடன் தனியே சந்தித்து பேசிய இபிஎஸ்-ஓபிஎஸ்..!
சென்னை, பிப்.15-
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தனியாக 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதத்திற்குள் நடைபெறவுள்ளது. இரு ஜாம்பவான்கள் இல்லாத நிலையில் மக்களின் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது என்பதை அறிய திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு பக்கம் பிரச்சாரம், மறு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை என கட்சிகள் படுபிஸியாக இருக்கின்றன.
இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகம் வந்த மோடி ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த விழா முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல்வர், துணை முதல்வர் இருவரின் கைகளையும் உயர்த்தி பிடித்துக் கொண்டார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வரும் துணை முதல்வரும் தனியாக சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர். தேர்தல் கூட்ணி குறித்தும் தேர்தல் குறித்தும் இந்த ஆலோசனை நடந்திருக்கலாம் என தெரிகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக தமிழக மக்கள் உள்ளனர்.
தமிழக மக்கள் அதிருப்தி கொண்டுள்ள திட்டங்கள் குறித்தும் இருவரும் மோடியிடம் பேசியிருக்கலாம் என்றும் தெரிகிறது. பிப்.8-ஆம் தேதிக்கு பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் எப்படி வெல்ல வேண்டும் என முனைப்பு காட்டி வரும் முதல்வரும், துணை முதல்வரும் அதற்கான திட்டங்களை மோடியிடம் பேசியிருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள்.
தனியாக சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட திட்டங்கள் குறித்த மக்களுக்கு ஆதரவான விஷயத்தை தேர்தல் அறிக்கையில் அறிவிப்பது குறித்து பேசினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. அதே வேளையில் வெறும் 10 நிமிடங்களில் எல்லா விஷயத்தையும் பேச முடியாது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேசியிருக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

No comments
Thank you for your comments