வானில் இருந்து சென்னை டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்த பிரதமர் மோடி
சென்னை, பிப்.15-
சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டியை நொடிப்பொழுதில் ரசித்ததாகப் பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அரசுமுறை பயணமாக சென்னை வந்துள்ள பிரதமர் மோடி, ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் சென்றார்.
அப்போது ஹெலிகாப்டரில் இருந்தபடியே சேப்பாக்கம் அரங்கில் நடக்கும் சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியை ரசித்ததாகத் தெரிவித்த பிரதமர் மோடி, வானில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

No comments
Thank you for your comments