சாலையோரத்தில் வசிக்கும் வயதானவர்களுக்கு உணவு!
புதுச்சேரி, பிப்.26-
சாரதாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் சாலையோரம் வசிக்கும் வயதான ஆதரவற்றவர்களுக்கு பெனவோலண்ட் அமைப்பு சார்பில் இரவு உணவு விநியோகம் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் கடலோரப் பகுதியில் வசிக்கும் வயதான ஆதரவற்றவர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு இரவு உணவு விநியோகம் செய்யப்பட்டது.
புதுச்சேரியில் கடலோரப் பகுதியில் 200 வயதான ஆதரவற்றவர்களுக்கு பெனேவோலண்ட் அமைப்பு சார்பில் சாரதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெனேவோலண்ட் அமைப்பு தலைவர் முனைவர் லோ. விஜயகுமார் முன்னிலையில் உணவு வழங்கி பெனவோலண்ட் அமைப்பினர் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். மேலும் சாரதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தும், உணவு வழங்க ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்து கொடுத்த பெனேவோலண்ட் அமைப்புக்கும் வயதான ஆதரவற்ற முதியோர்கள் வாயாற நன்றி கூறி வாழ்த்தினர்.

No comments
Thank you for your comments