Breaking News

விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்காக மத்திய அரசு முயற்சி....பிரதமர் மோடி பேச்சு


புதுடெல்லி, பிப்.25-

விவசாயிகள் வருமானத்தை 2 மடங்காக உயர்த்த மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் துவக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் பேசினார்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சரித்திர கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது மிக அதிகமாக உயர்த்த அரசு வகை செய்துள்ளது. அதைத்தவிர விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த 7 ஆண்டுகளாக விவசாயத்தின் தன்மையை மாற்றுவதற்கு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கு சிறந்த நீர் பாசன வசதி, சிறந்த தொழில்நுட்பம், கூடுதல் கடன், விவசாயிகளின் விளை பொருள்களுக்கு சந்தைகள், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு காப்பீட்டு திட்டம் ஆகியவை குறித்து அரசு கவனம் செலுத்தியுள்ளது. நெல் விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

விவசாயிகளின் விளை பொருள்களை விற்பனை செய்யும் பொழுது இடைத்தரகர்கள் குறுக்கிடாமல் இருப்பதற்காக அவர்களை ஒழிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயிகளின் விடாமுயற்சியும் அவர்களின் ஆர்வமும் நமக்கு உற்சாகம் தருவதாக உள்ளது. மத்திய அரசு விவசாயிகளுக்காக துவக்கி உள்ள திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள பயன்கள் குறித்தும் நாமோ ஆப்சில் எல்லா தகவல்களும் தரப்பட்டுள்ளன.

மத்திய அரசு இயற்றிய 3 விவசாய சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லியில் சுமார் 3 மாதங்களாக இந்திய விவசாயிகள் போராடி வரும் சூழ்நிலையில் பிரதமரின் செய்தி குறிப்பிடத் தகுந்ததாக அமைந்துள்ளது.

No comments

Thank you for your comments