Breaking News

இன்று முதல் மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை

சென்னை, பிப்.26-

பிப்ரவரி 26ம் தேதி முதல் 9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டாம் என்று தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

நேற்று சட்டப்பேரவையில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து பிப்ரவரி 26ம் தேதி முதல் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பிப்ரவரி 8ம் தேதி முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.


2020 & 2021ம் கல்வி யாண்டில் கொரோனா காரணமாக 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி அடைய செய்வார்கள் என்று சட்டப்பேரவையில் பழனிசாமி அறிவித்தார்.

இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைய செய்யப்பட்டுவிட்டதால் ஏற்கனவே பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்ட 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டிய தேவை இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் 2021&2022ம் கல்வி ஆண்டு பள்ளி தொடங்கும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments