Breaking News

இந்திய குடிமைப்பணி போட்டித் தேர்வு பயிற்சி அறிவிப்பு

சென்னை, பிப்.16-

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா அவர்கள் அறிவிப்பில்,

மாண்புமிகு அமைச்சர் (மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தம்) அவர்கள் 11.07.2017 அன்று சட்ட பேரவையில் அறிவித்ததன்படி மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டித் தேர்வில் கலந்துக்கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டது. 

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை  மீன்வளத்துறையின் இணையதளமான www.fisheries.tn.gov.inலிருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்பபடிவங்களை திருவள்ளுர் (இருப்பு) பொன்னேரி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் மீன்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம், எண்.05, பாலாஜி தெரு, சங்கர் நகர், வேண்பாக்கம், பொன்னேரி -601 204. (அலுவலக தொலைபேசி எண்.044 27972457) என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேடியாகவோ 19.02.2021  பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா அவர்கள் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர்கள்/ துணை இயக்குநர்கள்/இணை இயக்குநர்கள் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்.                                                                         

முகவரி:

மீன்துறை உதவி  இயக்குநர் அலுவலகம், 77,சூரிய நாராயண தெரு, இராயபுரம்-600013. சென்னை மாவட்டம்.

தொலைபேசி எண். 044&25951697

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி அவர்களும் தெரிவித்துள்ளார். 

கிளிக் செய்யவும்




www.fisheries.tn.gov.in/FreeTraining

No comments

Thank you for your comments